
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். இதனையடுத்து இருவரது பிரிவு குறித்து ரசிகர்கள் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் இளைய சகோதரி சௌந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் சுட்டுரைப் பக்கத்தில் சிறிய வயதில் ஐஸ்வர்யா மற்றும் தனது அப்பா ரஜினிகாந்த்துடன் இருக்கும் புகைப்படத்தை முகப்பு படமாக வைத்துள்ளார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | ''குக் வித் கோமாளி'யில் இந்தக் காரணத்தால் மனோபாலாவை வெல்ல முடியாது''
சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக தனுஷ் கதாநாயகனா நடித்த வேலை இல்லா பட்டதாரி 2 படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#NewProfilePic pic.twitter.com/0SnIQYvkkg
— soundarya rajnikanth (@soundaryaarajni) January 17, 2022