அப்பாவே அப்படி என்றால் மகனை எண்ணிப் பாருங்கள்: விஷால் பற்றி நடிகர் மாரிமுத்து

இப்படத்தின் பெயரை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தார் இயக்குநர்.
அப்பாவே அப்படி என்றால் மகனை எண்ணிப் பாருங்கள்: விஷால் பற்றி நடிகர் மாரிமுத்து

விஷால் நடிப்பில் து. ப. சரவணன் இயக்கியுள்ள படம் வீரமே வாகை சூடும். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

நடிகர் மாரிமுத்து, இப்படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்தது பற்றி கூறியதாவது:

'வீரமே வாகை சூடும்' இயக்குனர் து.ப. சரவணனின் முதல் படம். ஒரு இயக்குநருக்கு முதல் பட வாய்ப்பைக் கொடுத்த விஷால் சாருக்கு நன்றி. டிரெய்லர் பார்க்கும்போதே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். பொறி பறக்கிறது. இசைஞானியின் இசைவாரிசு மற்றும் அசல் வாரிசு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்காக ஒரு வேள்வியே நடத்தியிருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது. அவரின் இசை, படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும்.

விஷாலுடன் இது எனக்கு 5-வது படம். மருது-வில் ஆரம்பித்து தொடர்ந்து அவருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். அன்றிலிருந்து விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமும், விஷாலும் வெளிப்படுத்தும் பாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அவர் கடும் உழைப்பாளி. நடிப்பு, தயாரிப்பு, சங்கப் பணிகள் என்று 24 மணி நேரமும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி. அதையும் விட விஷால் மிகப் பெரிய மனிதாபிமானி. படப்பிடிப்பில் இருக்கும் கடைநிலை ஊழியர் வரை யாருடைய மனதும் புண்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்.

இப்படத்தின் பெயரை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தார் இயக்குநர். இறுதியாக வீரமே வாகை சூடும் என்று கூறினார். இந்தக் கதைக்கு மிகவும் பொருத்தமாக தோன்றியது. அரசு முத்திரையில் வாய்மையே வெல்லும் என்று இருப்பது போல், சக்திவாய்ந்த பெயராக இருந்தது. வீரம் என்ற சொல்லுக்கு விஷாலைப் பொருத்திப் பார்க்கலாம்.

ஒரு நாள் படப்பிடிப்பின் போது விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டி சார் வந்திருந்தார். அப்போது அவருக்கு நான் கை கொடுத்தேன், அவரும் கொடுத்தார். பிறகு மூன்று நாள்களுக்குக் கை வலித்தது. நான் மிகைப்படுத்திக் கூறவில்லை, அந்த அளவுக்கு உடம்பை இரும்பு மாதிரி வைத்திருக்கிறார். அப்பாவே அப்படி என்றால் மகனைப் பற்றி நினைத்துப் பாருங்கள். விஷால் சண்டைக் காட்சிகளில் கலக்கி இருக்கிறார். ஒவ்வொரு அடியும் தூள் பறக்கிறது. விஷால் படப்பிடிப்புத் தளத்தில் இப்படத்தின் இரண்டு சண்டைக் காட்சிகளைக் காட்டினார். பார்த்ததும் மிரண்டு போனேன். பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

டிரெய்லரில் ஒரு காட்சியைப் பார்த்திருப்பீர்கள். விஷாலிடம் நான் சண்டையை நிறுத்தப் போறதில்லையா என்று கேட்பேன். அதற்கு, அதை என் எதிரிதான் முடிவு பண்ண வேண்டும் என்பார். இதுதான் இப்படத்தின் கதை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com