
நகைச்சுவை நடிகர் சதிஷ் முதன்முறையாக நாயகனாக அறிமுகமான படம் 'நாய் சேகர்'. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்திருந்த இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் நடிகர் சதிஷுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலமான பவித்ரா லக்ஷ்மி நடித்திருந்தார். மேலும் ஜார்ஜ் மரியம், இளவரசு, சங்கர் கணேஷ், ஞானசம்பந்தம், கிஷோர் ராஜ்குமார், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இதையும் படிக்க | சில நேரங்களில் சில மனிதர்கள்' : சில இடங்களில் சில தடுமாற்றங்கள் - திரை விமர்சனம்
கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் வருவாய் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினரின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Thank u so much @Ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh#KalpathiSSuresh@archanakalpathi @aishkalpathi
God & Cinema fans for making #NaaiSekar a big Success