
தன்னை மகள் வரவேற்கும் புகைப்படத்தை நடிகர் அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புஷ்பா திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிக்கு தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் மிக முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா மாமா கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் பாடலாக அமைந்தது.
குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் இந்தத் திரைப்படம் வசூல் சாதனை புரிந்தது. இதனையடுத்து அல்லு அர்ஜுனின் அல வைக்குந்தபுரமுலோ படத்தை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், அந்தப் படத்தின் ஹிந்திப் பதிப்பு கார்த்திக் ஆர்யன் நடிப்பில் தற்போது உருவாகி வருவதால் அந்தப் படத்தை ஹிந்தியில் வெளியிடும் முடிவு கைவிடப்பட்டது.
இதையும் படிக்க | துல்கர் சல்மானின் 'ஹே சினாமிகா' வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்
தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. புஷ்பாவின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று கூறப்படுகிறது. அதற்கான பணிகளில் இயக்குநர் சுகுமார் ஈடுபட்டு வருகிறார்.
இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ஃபகத் ஃபாசில் இடையேயான மோதல் காட்சிகள்தான் பிரதானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அல்லு அர்ஜுன் வரவேற்பதற்காக வெல்கம் நானா என இலைகள், மற்றும் பூக்களால் எழுதப்பட்ட வாசகத்துடன் தனது மகள் தன்னை வரவேற்பதை புகைப்படமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், வெளிநாடுக்கு சென்று 16 நாள்கள் கழித்து திரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.