
பிக்பாஸ் அல்டிமேட்டில் பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான அனிதா சம்பத் மீண்டும் கலந்துகொள்ளவிருக்கிறார். இதற்கான அறிவிப்பை விடியோ மூலம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது.
அதில் செய்தி வாசிக்கும் அனிதா சம்பத், அவரை அவரே கிண்டலடிக்கும் விதமாக, ''ஸ்பேஸ் இல்லை என்று சொன்ன அனிதா சம்பத்துக்கு பிக்பாஸ் அல்டிமேட்டில் ஸ்பேஸ் கிடைத்துவிட்டது'' என்று தெரிவிக்கிறார். பிக்பாஸ் 4வது சீசனில் அனிதா சம்பத் கலந்துகொண்டிருந்தார். தற்போது 7வது போட்டியாளராக அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கிறார்.
இதையும் படிக்க | விஜய் மக்கள் இயக்கத்தின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்
பிக்பாஸ் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் காணும் வகையில் புதிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நாளை (ஜனவரி 30) மாலை 6.30க்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாகவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியைும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முந்தைய பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போட்டியாளர்களும் கலந்துகொள்ளலாம்.
இந்தப் போட்டியாளர்களாக கவிஞர் சினேகன், வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி, ஜூலி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இவர்களுடன் புதிய போட்டியாளர்களும் கலந்துகொள்வர். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டினில் இருந்தவர்களுக்கு நிகழ்ச்சியின் நுணுக்கங்கள் தெரியும் என்பதால் போட்டி அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.