
பிக்பாஸ் அல்டிமேட் துவக்க விழா நாளை (ஜனவரி 30) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கவிருக்கிறார்.
இதனை முன்னிட்டு வெளியான ப்ரமோவில் பேசும் கமல்ஹாசன், ஏற்கனவே பங்கேற்ற போட்டியாளர்கள் என்றாலும் அவர்கள் வேகம் புதிது, வியூகம் புதிது, போட்டியும் புதிது என்கிறார்.
இதையும் படிக்க | கவின் - ரெபா நடித்துள்ள 'ஆகாஷ் வாணி' முதல் பார்வை போஸ்டர் இதோ
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா, கவிஞர் சினேகன், அனிதா சம்பத், தாடி பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி, ஜுலி ஆகியோர் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.