நிர்வாண படங்களை பகிர்ந்த ரன்வீர் - ஆடைகளை தானமாக அளிக்க முன்வந்த அமைப்பு

ரன்வீர் சிங்கின் செயலை கண்டிக்கும் விதமாக அமைப்பு ஒன்று ஆடைகளை மக்களிடம் தானமாக பெற்றுவருகிறது.  
நிர்வாண படங்களை பகிர்ந்த ரன்வீர் - ஆடைகளை தானமாக அளிக்க முன்வந்த அமைப்பு

ரன்வீர் சிங்கின் செயலை கண்டிக்கும் விதமாக அமைப்பு ஒன்று ஆடைகளை மக்களிடம் தானமாக பெற்றுவருகிறது. 

கடந்த 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்ற நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு 83 திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் கபில் தேவ் வேடத்தில் நடித்த ரன்வீர் சிங் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றார். 

இந்த நிலையில் சர்வதேச இதழ் ஒன்றுக்கு ரன்வீர் சிங் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர சர்ச்சை உருவானது. 

கலாச்சார சீர்கேடு என அவரை பலரும் கண்டித்தனர். அவருக்கு எதிராக காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டன. மற்றொருபுறம் நிர்வாணமாக புகைப்படம் வெளியிடும் நிகழ்வு டிரெண்டாக உருவானது. நடிகர் விஷ்ணு விஷாலும் தனது இன்ஸ்டாபக்கத்தில நிர்வாணமாக இருக்கும் படத்தை சர்ச்சையில் சிக்கினார்.  

இதன் ஒரு பகுதியாக மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த அமைப்பு ஒன்று ரன்வீர் சிங்கிற்கு ஆடைகளை தானமாக அளிக்க முன்வந்துள்ளதாம். இதற்காக மக்களிடம் தானமாக அந்த அமைப்பு பெற்றுவருகிறதாம். 

துணிகளை பெறும் பெட்டியில் ஹிந்தி திரையுலகம் ஆபத்தில் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளராம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com