செஸ் ஒலிம்பியாட் - இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு போன் செய்த ரஜினிகாந்த் 

செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். 
செஸ் ஒலிம்பியாட் - இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு போன் செய்த ரஜினிகாந்த் 

செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா நேற்று (ஜூலை 28) சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி நிகழ்வினை துவங்கிவைத்தார். 

இந்நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள், அனுராக் தாக்கூர், எல்.முருகன், கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

துவக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவானது இயக்குநர் விக்னேஷ் சிவனின் மேற்பார்வையில் நடைபெற்றது. விழாவை சிறப்பாக நடத்தியதாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. 

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், தமிழர் வரலாற்று தொன்மையை பன்னாட்டு வீரர்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில் நடைபெற்ற உணர்வுப்பூர்வமான கலை நிகழ்ச்சியை கண்டுமகிழ்ந்தோம். பின்னணி குரல் கொடுத்த கமல்ஹாசன் சார், இயக்கிய விக்னேஷ் சிவன் மற்றும் குழு நடன கலைஞர்களுக்கு அன்பு
நன்றியும் என்று தெரிவித்திருந்தார். 

இதன் ஒரு பகுதியாக நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் விக்னேஷ் சிவனை தொலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், என்றும் நினைவில் வைத்திருக்கக் கூடிய நாள். நிகழ்வின் போது பாராட்டியதற்கும் பிறகு தொலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டியதற்கும் நன்றி ரஜினிகாந்த் சார். உங்கள் குரலைக் கேட்பதிலும் பாராட்டைக் கேட்பதிலும் மிகவும் மகிழ்ச்சி. எனது நாளை நீங்கள் இன்னும் அழகாக மாற்றிவிட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com