பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கைது

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல இயக்குநர் பால் ஹக்கீஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இயக்குநர் பால் ஹக்கீஸ்
இயக்குநர் பால் ஹக்கீஸ்

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல இயக்குநர் பால் ஹக்கீஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவைச் சேர்ந்த இயக்குநர் பால் ஹக்கீஸ், தான் தயாரித்து இயக்கிய ‘கிராஷ்’(crash) என்கிற திரைப்படத்திற்காக கடந்த 2006 ஆம் ஆண்டு சிறந்த திரைக்கதையாளர் மற்றும் சிறந்த தயாரிப்பாளர் பிரிவில் 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றவர்.

இவர் 'நெக்ஸ்ட் த்ரீ டேஸ்’ ‘தேர்ட் பெர்சன்’ உள்ளிட்ட 7 படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இத்தாலியில் திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்டவர் மீது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த இத்தாலி காவல்துறையினர் அவரைக் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். 

வழக்கு விசாரணை வருகிற வியாழக்கிழமை நடைபெற உள்ளது. 

முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு 4 இளம்பெண்கள் தங்களைப் பால் ஹக்கீஸ் பாலியல் வன்கொடுமை செய்தார் என வழக்குத் தொடர்ந்தனர்.

விசாரணையில் அதில் 2 பெண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறிக்க முயன்றனர் என பால் ஹக்கீஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com