ஆர்ஜே பாலாஜியின் 'வீட்லே விசேஷம்' வெளியீட்டு தேதி அறிவிப்பு

போனி கபூர் தயாரிப்பில் ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேசங்க முதல் பார்வை போஸ்டர் வெளியானது. 
ஆர்ஜே பாலாஜியின் 'வீட்லே விசேஷம்' வெளியீட்டு தேதி அறிவிப்பு

'மூக்குத்தி அம்மன்' படத்துக்கு பிறகு ஆர்ஜே பாலாஜி நடித்திருக்கும் படம் 'வீட்ல விசேஷம்'. ஹிந்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற 'பதாய் ஹோ' படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. 

ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாளர் போனி கபூர் தனது பே வியூ பிராஜெக்ட்ஸ் சார்பாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தை ஆர்ஜே பாலாஜி மற்றும் என்ஜே சரவணன் இணைந்து இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். 

இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி, கேபிஏசி லலிதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற ஜுன் 17 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இளம் வயது மகன்கள் இருக்கும் ஒரு வீட்டில் அம்மா கர்ப்பமானால் என்ன நடக்கும் என்பதை நகைச்சுவை கலந்துசொல்லியிருக்கும் படமே 'வீட்ல விசேஷம்' படத்தின் கதை. இதன் காரணமாக இந்தப் படம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com