Enable Javscript for better performance
நடிகர் ஆதிக்கும் நிக்கி கல்ராணிக்கும் விரைவில் திருமணம்?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு சினிமா செய்திகள்

    நடிகர் ஆதிக்கும், நிக்கி கல்ராணிக்கும் விரைவில் திருமணம்?

    By DIN  |   Published On : 19th March 2022 01:02 PM  |   Last Updated : 19th March 2022 01:02 PM  |  அ+அ அ-  |  

    nikki-galrani-aadhi

     

    'மிருகம்', 'ஈரம்' படங்களின் மூலம் பிரபலமானவர் ஆதி. இவர் நடித்த 'கிளாப்' திரைப்படம் சமீபத்தில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    இந்த நிலையில் நடிகர் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இணைந்து 'யாகவராயினும் நா காக்க', 'மரகத நாணயம்' படங்களில் நடித்துள்ளனர். 

    இதையும் படிக்க | பா.ரஞ்சித் வழங்கும் 'குதிரைவால்' - திரை விமர்சனம் : கனவு துரத்தினால் ?

    ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இணைந்து பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வதாக கடந்த சில ஆண்டுகளாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் ஆதியின் குடும்ப நிகழ்வுகளில் நிக்கி கலந்துகொண்டிருக்கும் செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    விரைவில் இருவரது திருமண அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ஆதி தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நாயகனாக நடித்து வரும் 'தி வாரியர்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.  


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp