
டோர்பாஸ் என்ற ஹிந்திப் படத்தை இயக்கியவர் கிரிஸ் மாலிக். இவர் மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கிரிஸ் மாலிக்கின் 17 வயது மகன் 5வது தளத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். அவரே குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து விரிவான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க | பா.ரஞ்சித் வழங்கும் 'குதிரைவால்' - திரை விமர்சனம் : கனவு துரத்தினால் ?
இந்த நிலையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இருப்பினும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.