
ஆல்யா மானஸா, சஞ்சீவ் இணைந்து நடித்த ராஜா ராணி தொடர் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்தத் தொடரில் இணைந்து நடித்த ஆல்யாவும் சஞ்சீவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அய்லா என்ற மகள் இருக்கிறார்.
இந்த நிலையில் ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகம் உருவாகி ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டாவது சீசனும் 900 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதையும் படிக்க | பா.ரஞ்சித் வழங்கும் 'குதிரைவால்' - திரை விமர்சனம் : கனவு துரத்தினால் ?
இந்த நிலையில் ஆல்யா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு குழந்தை பிறப்பதற்கு குறைவான காலமே இருப்பதால் மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்கும்படி தெரிவித்துள்ளனராம்.
இதன் காரணமாக ஆல்யா ராஜா ராணி தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரியா நடிக்கிறார். தற்போது இதற்கான ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.