
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திலிருந்து இரண்டாவது பாடலான ஜாலியோ ஜிம்கானா இன்று மாலை வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய ப்ரமோவை வெளியிட்டுள்ளது.
இந்த ப்ரமோவில் நடன இயக்குநர் ஜானி நடன ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்க, இயக்குநர் நெல்சன், ரெடின் கிங்ஸ்லே, விடிவி கணேஷை நான் பார்த்துக்கிறேன் என அவர்களை கலாய்க்கிறார். இந்த விடியோ பாடல் மிகவும் கலகலப்பான பாடலாக இருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.
இதையும் படிக்க | 'நிலா அது வானத்து மேலே' பாடலை மகன்களுக்காக மாற்றி பாடிய தனுஷ்: கைதட்டி பாராட்டிய இளையராஜா : விடியோ
அனிருத் இசையில் கு.கார்த்திக் எழுதியுள்ள ஜாலியோ ஜிம்கானா பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். அரபிக் குத்து பாடலுக்கு பிறகு இந்தப் பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஆனால் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் இன்னும் பீஸ்ட் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கவில்லை. ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎஃப் 2 படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Steps evlo tough ah irundhalum.. #ThalapathyVijay Beast mode la erangi #JollyOGymkhana tharaporaru!
— Sun Pictures (@sunpictures) March 19, 2022
Today @ 6pm @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @kukarthik1 @hegdepooja @manojdft @AlwaysJani @Nirmalcuts #Beast #BeastSecondSingle pic.twitter.com/DIJq4nfsA6