
நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை மேடையில் அடித்த நடிகர் வில் ஸ்மித் மீது ஆஸ்கர் நிர்வாகம் விசாரணையைத் துவங்கியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று(மார்ச்-28) நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் தனது மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித்தைக் கிண்டலடித்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை மேடையில் ஏறி அறைந்தார் வில் ஸ்மித்.
அலோபீசியா பாதிப்பு காரணமாக தலைமுடி கொட்டி வந்ததால் மொட்டை அடித்திருந்தார் ஜாடா. இதுபற்றி பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார். ஆனால் ஆஸ்கர் விருது விழா மேடையில், ஜி ஐ ஜேன் படத்தைக் குறிப்பிட்டு (1997-ல் வெளியான படம்) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக், ஜாடாவைக் கிண்டலடித்தார். இதைக் கேட்டு கடுப்பான வில் ஸ்மித், மேடையிலேயே கிறிஸ் ராக்கை அறைந்து, இனிமேல் என் மனைவியின் பெயரை நீ கூறக்கூடாது என்று உரத்த குரலில் கூறினார். இதனால் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை தாக்கியதற்காக வில் ஸ்மித் இன்று அவரிடம் மன்னிப்புக் கேட்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இருப்பினும்,ஆஸ்கர் நிர்வாகம் வில் ஸ்மித்துக்கு எதிராக கண்டனத்தைப் பதிவு செய்ததுடன் விசாரணையை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளது.
Will Smith apologies to Chris and Academy. pic.twitter.com/MDhxFjadeA
— LetsOTT Global (@LetsOTT) March 29, 2022