பவன் கல்யாண் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி

பவன் கல்யாணை இயக்குவது பற்றி ஒரு பேட்டியில் சமுத்திரக்கனி கூறியதாவது:
பவன் கல்யாண் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி

அபிராமி ராமநாதன் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி, ஜெயப்பிரகாஷ், முனீஸ்காந்த் போன்றோர் நடித்த விநோதய சித்தம் படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

இந்தப் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. பவன் கல்யாண் கதாநாயகனாக நடிக்க, சமுத்திரக்கனி இயக்கவுள்ளார். சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும் தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தரம் தேஜும் நடிக்கவுள்ளார்கள். 

பவன் கல்யாணை இயக்குவது பற்றி ஒரு பேட்டியில் சமுத்திரக்கனி கூறியதாவது:

ரசிகர்களுக்கு நல்ல செய்தி விரைவில் வரும். நானே பவன் கல்யாணின் ரசிகர் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மனத்தில் கொண்டு பவன் கல்யாணை இயக்குவேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com