ஜெனிஃபர் லோபஸ்
ஜெனிஃபர் லோபஸ்

’குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமாக இருக்கிறது’: ஜெனிஃபர் லோபஸ்

டெக்ஸாஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமாக இருப்பதாக பிரபல பாடகி ஜெனிஃபர் லோபஸ் தெரிவித்துள்ளார். 

டெக்ஸாஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமாக இருப்பதாக பிரபல பாடகி ஜெனிஃபர் லோபஸ் தெரிவித்துள்ளார். 

டெக்ஸாஸ் மாகாணம், யுவால்டி நகரிலுள்ள ராப் தொடக்க நிலைப் பள்ளியில் சால்வடாா் ரொலாண்டோ ரமோஸ் என்பவா் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவா்கள் உள்பட 21 போ் பலியான சம்பவம் அமெரிக்கா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கும் சட்டங்களில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி நாடு முழுவதும் ஆா்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், சம்பவம் குறித்து உலகளவில் பிரபலமான பாடகியும், நடிகையுமான ஜெனிஃபர் லோபஸ் “நாடு முழுவதிலும் நடக்கும் இதுமாதிரியான வன்முறைகளை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். நமது குழந்தைகளையும் நமக்கு அன்பானவர்களாக இருப்பவர்களையும் நினைத்து பயப்படுகிறேன். நம் அனைவருக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com