
நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார்.
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க | டிமாண்டி காலனி 2 படப்பிடிப்பு தொடக்கம்
இந்தப் படத்திலிருந்து 2 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...