
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. துவக்கத்தில் இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுவருதவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிப்பதாக சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் சிவகார்த்திகேயனும் கதாநாயகியாக தமன்னாவும் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.
இதையும் படிக்க | நடிகர்களின் சாயலில் விநாயகர் சிலைகள் - நடிகர் பிரகாஷ் ராஜ் அதிரடி கேள்வி
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை எனவும் அவருக்கு பதிலாக ஜெய் நடிக்கிறார் என்றும் தகவல் கிடைத்துள்ளது. ஜெய் ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து வேட்டை மன்னன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் முழுமையடையவில்லை.
கூடுதல் தகவல் என்னவென்றால் இந்தப் படத்தில் தமன்னாவுக்கு ஜோடியாக ஜெய் நடிக்கிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம்.