
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து அரபிக் குத்து பாடலுக்கு கத்ரீனா கைஃப் நடனமாடிய விடியோ வைரலாகியுள்ளது.
கத்ரீனாவின் தாயார் சுசானே டர்கோட் 2015 ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்காக மவுண்டன் வியூ பள்ளியைக் கட்டினார். கத்ரீனாவின் சகோதரர் செபஸ்டீன் லாரன்ட்டும் அவருடன் பள்ளியின் நினைவு நிகழ்வுக்கு வந்திருந்தார். ஆதரவற்ற மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்குவதற்காக, இந்தியாவின் நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மவுண்டன் வியூ பள்ளி திறக்கப்பட்டது. கத்ரீனா கைஃபின் தாயார் சுசானே நீண்ட காலமாக அந்தப் பள்ளியில் கற்பித்து வருகிறார்.
தமிழ்நாட்டிலுள்ள மவுண்டன் வியூ பள்ளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கத்ரீனா கைஃப் நடிகர் விஜய்யின் அரபிக்குத்து பாடலுக்கும், ஜாலியோ ஜிம்கோனா பாடலுக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இந்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#KatrinaKaif dances for #ArabicKuthu with the same signature moves @anirudhofficial @actorvijay @Jagadishbliss @AlwaysJanipic.twitter.com/3UwJexVv3m
— DPK (@dp_karthik09) September 25, 2022