
பிரபல மலையாள இயக்குநர் சித்திக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.
விஜய் - சூர்யா நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஸ் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து, எங்கள் அண்ணா, சாது மிரண்டா, காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களையும் சித்திக் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் சித்திக்கிற்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: புஷ்பா - 2: ஃபகத் ஃபாசில் சிறப்புப் போஸ்டர் வெளியீடு
தற்போது, அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...