‘பெண்கள் எழுச்சி’- சமந்தாவின் ட்வீட்டுக்கு காரணம் என்ன தெரியுமா? 

நடிகை சமந்தா பகிர்ந்துள்ள பெண்கள் எழுச்சி பதிவு வைரலாகி வருகிறது. 
‘பெண்கள் எழுச்சி’- சமந்தாவின் ட்வீட்டுக்கு காரணம் என்ன தெரியுமா? 

வெற்றி தியேட்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘டிரைவர் ஜமுனா’, நயன்தாரா நடித்த ‘கனெக்ட்’, த்ரிஷா நடித்த ‘ராங்கி’, கோவை சரளா நடித்த ‘செம்பி’ படங்களின் பேனர்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வாரம் வெளியான படங்களிலே பெண்களை மையமாகக் கொண்ட படங்களே அதிகமாக வெளியானதும் குறிப்பிடத்தக்கது. 

“நானும் என் சகோதரியும் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கைக் கடந்து செல்லும் போது எல்லா பேனர்களிலுமே பெண்கள் முதன்மை கதாபாத்திரமாக உள்ளதைப் பார்த்தோம். தமிழ் சினிமா எவ்வளவு தூரம் வந்து விட்டது! 10 ஆண்டுகளுக்கு முன்பு இது கற்பனை செய்ய முடியாததாக இருந்திருக்கும்” என ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டு இருந்தார். 

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகை சமந்தா, “பெண்கள் எழுச்சி” என பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்  இதனை, “பெண்களின் காட்சிகள்” என பதிவிட்டுள்ளார். 

தமிழில் ஆண்கள் முதன்மையான கதாபாத்திரங்கள் உள்ள படங்களே அதிகம் வெளியாகும். தற்போது இந்த நிலைமை மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என ரசிகர்கள் சமூல வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com