வாரிசு படத்தின் குடும்ப போஸ்டரை வெளியிட்டது படக்குழு! 

பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு  வெளியிட்டுள்ளது. 
வாரிசு படத்தின் குடும்ப போஸ்டரை வெளியிட்டது படக்குழு! 

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா, ஷியாம், பிரகாஷ்ராஜ், சரத் குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். 

படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் என பலர் கலந்து கொண்டனர்.  

இந்த நிலையில் வாரிசு படத்தின் சென்சார் சான்றிதழ் யு வெளியாகியுள்ளது. அதில் படத்தின் நீளம் 2.50 நிமிடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

டிரைலரில் பிரபு, குஷ்பு இல்லை என்று ரசிகர்கள் கவலைப்பட்டு கொண்டிருந்த நிலையில் படக்குழு வாரிசு குடும்பத்தின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளது. இதில் பிரபு இருக்கிறார். ஆனால் இந்த போஸ்டரிலும் குஷ்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com