நடிப்பதில் விருப்பம் இல்லை: மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் தனக்கு நடிப்பதில் பெரிய விருப்பம் இல்லை என கூறியுள்ளார்.
நடிப்பதில் விருப்பம் இல்லை: மிஷ்கின்

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி  நுட்பமான கதைகளை இயக்கி வருபவர் இயக்குநர் மிஷ்கின். 

இசை மீது அதீத ஆர்வம் கொண்ட மிஷ்கின், சமீபத்தில் இசை பயிற்சியும் எடுத்துக்கொண்டார். அவ்வபோது மேடைகளில் இளையராஜா பாடல்களைப் பாடுவதுடன், பாடகர்களுக்கான சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்குபெற்றார். டெவில் படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

மேலும், நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார். அவர் நடிப்பில் லியோ, மாவீரன் படங்கள் உருவாகியுள்ளன.

மாவீரனில் வில்லனாக நடித்துள்ள மிஷ்கினின் டிரைலர் காட்சிகள் வரவேற்பைப் பெற்ற நிலையில் நேர்காணல் ஒன்றில், "எனக்கு நடிப்பதில் பெரிய விருப்பம் இல்லை. சம்பளம் அதிகமாக குடுப்பதால் ஆண்டிற்கு 50 நாள்கள் நடித்தால் மட்டும் போதும் என்கிற மனநிலையில் இருக்கிறேன்” என மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com