
ஜப்பான் படத்துக்கான டப்பிங் பணிகளை நடிகர் கார்த்தி தொடங்கியுள்ளார்.
’ஜிப்ஸி’ படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கி வரும் படம் ‘ஜப்பான்’. இதில் கார்த்தி நாயகனாகவும், அனு இமானுவேல் நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு ஜப்பான் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.
சமீபத்தில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.
இதையும் படிக்க: அநீதி ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
இந்த நிலையில், ஜப்பான் படத்துக்கான டப்பிங் பணிகளை நடிகர் கார்த்தி மேற்கொள்ளும் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...