பிரபல நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்!

பிரபல நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல்நலக்குறைவால் காலமானார்.
பிரபல நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்!

பல படங்களில் துணை நடிகராகவும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமான நடிகர் விஸ்வேஷ்வர ராவ் (62) புற்றுநோயால் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

6 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கிய விஸ்வேஷ்வர ராவ் தமிழ், தெலுங்கு என 350 படங்களுக்கு மேல் நடித்தவர். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றிருந்தார்.

முக்கியமாக, பிதாமகன் படத்தில் லைலாவின் தந்தையாகவும் பல படங்களில் வடமாநில சேட் கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானார். சென்னையில் வசித்தபடியே படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டிலிருந்து புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தவர், இன்று உடல்நலக்குறைவால் இறந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவரின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com