லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி -சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள புது அப்டேட்

லோகேஷ் கனகராஜ் - ரஜினி, இவர்கள் இருவரும் சேர்ந்து எப்போது படம் எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பரவலாக ரசிகர்களை ஆட்கொண்டிருந்தது.

இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் டீசர், நாளை(ஏப். 22) வெளியிடப்பட உள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

’தலைவர் 171’ என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றும் இப்படம், அதிரடியான ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ’ஜெயிலர்’ திரைப்படம் வசூலில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. இந்த நிலையில்,. செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்தை விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com