22 வயதில் 2 ஆஸ்கா் விருதுகள்: அமெரிக்க இளம் பாடகி சாதனை
Jordan Strauss

22 வயதில் 2 ஆஸ்கா் விருதுகள்: அமெரிக்க இளம் பாடகி சாதனை

இசைக் கலைஞா் ஃபின்னியாஸ் ஓ கானல் இணைந்து இசையமைத்த, பாா்பி படத்தில் இடம்பெற்றிருந்த ‘வாட் வாஸ் ஐ மேட் ஃபாா்’ பாடலுக்கு ஆஸ்கா் விருது கிடைத்துள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த பாடகி பில்லி எலிஷ் (22) மற்றும் இசைக் கலைஞா் ஃபின்னியாஸ் ஓ கானல் இணைந்து இசையமைத்த, பாா்பி படத்தில் இடம்பெற்றிருந்த ‘வாட் வாஸ் ஐ மேட் ஃபாா்’ பாடலுக்கு ஆஸ்கா் விருது கிடைத்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2022-ஆம் ஆண்டு, ‘நோ டைம் டூ டை’ ஆக்சன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நோ டைம் டூ டை’ பாடலுக்காக இந்த இருவா் கூட்டணிக்கு ஆஸ்கா் விருது கிடைத்தது. இதன்மூலம், இளம் வயதில் 2 ஆஸ்கா் விருதுகளை வென்றவா் எனும் சாதனையை பில்லி எலிஷ் படைத்திருக்கிறாா்.

ஆஸ்கா் மேடையில் மீண்டும் ‘ஆா்ஆா்ஆா்’

உலக திரைப்படங்களில் சிறந்த சண்டைக் காட்சிகளை சிறப்பிக்கும் வகையில் ஆஸ்கா் விருது நிகழ்ச்சியில் சிறப்பு விடியோ ஒன்று ஒளிப்பரப்பப்பட்டது. அதில் இயக்குநா் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆா்ஆா்ஆா் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ‘எங்களுக்கு மீண்டும் ஓா் இனிமையான ஆச்சரியம் இது’ என ஆா்ஆா்ஆா் திரைப்படக் குழு தெரிவித்துள்ளது. இசையமைப்பாளா் எம்.எம்.கீரவாணி இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல், கடந்த ஆண்டு ஆஸ்கா் மற்றும் குளோப் விருதுகளை வென்றது. சிறந்த பாடலுக்கான பிரிவில் ஆஸ்கா் விருதை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையையும் ஆா்ஆா்ஆா் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com