பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி சினிமாவில் அறிமுகம்!

சத்ரபதி சிவாஜியின் மனைவி ராணி சாய் போன்ஸாலே கதாபாத்திரத்தில் ஜனாயீ போஸ்லே நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி சினிமாவில் அறிமுகம்!
படம் | ஜனாயீ போஸ்லே எக்ஸ் தளப் பதிவு
படம் | சந்தீப் சிங் எக்ஸ் தளப் பதிவு

பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாயீ போஸ்லே சினிமாவில் அறிமுகமாகிறார். பிரபல பாடகி பத்ம விபூஷண் ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாயீ போஸ்லேவும் பாடகியாவார். இந்நிலையில், அவர் முதன்முறையாக திரைத்துறையில் நடிகையாக அறிமுகமாகிறார்.

ஆஷா போஸ்லேவுடன் ஜனாயீ போஸ்லே
ஆஷா போஸ்லேவுடன் ஜனாயீ போஸ்லேபடம் | ஜனாயீ போஸ்லே எக்ஸ் தளப் பதிவு

சத்ரபதி சிவாஜியின் மனைவி ராணி சாய் போன்ஸாலே கதாபாத்திரத்தில் ஜனாயீ போஸ்லே நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் சந்தீப் சிங்கின் ‘தி ப்ரைட் ஆஃப் பாரத் (பாரதத்தின் பெருமை) - சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ திரைப்படம் மூலம் முதன்முறையாக நடிகையாக அறிமுகமாகிறார் பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாயீ போஸ்லே.

இதுகுறித்து சமூக வலைதளப் பதிவில் பாடகி ஆஷா போஸ்லே தெரிவித்திருப்பதாவது, திரையுலகில் என் பாசமிகு பேத்தி ஜனாயீ போஸ்லே இணைவதை காண்பதில் நான் நிஜமாகவே பெருமகிழ்ச்சியடைகிறேன். திரைத்துறை வரலாற்றில் அவளுக்கான இடத்தை, அவள் அடைவாள் என்பதை உறுதியாக நம்புகிறேன். அவளுக்கும் சந்தீப் சிங்கிற்கும் வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ‘தி ப்ரைட் ஆஃப் பாரத் - சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ திரைப்படம், 2026-ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளான பிப்ரவரி-19இல் வெளியிடப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com