ஆஞ்சியோ-பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டதா? அமிதாப் பச்சன் விளக்கம்

ஆஞ்சியோ-பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்து அமிதாப் பச்சன் விளக்கம் அளித்துள்ளார்.
சச்சினுடன் கிரிக்கெட் போட்டியைக் கண்டு ரசித்த அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன்
சச்சினுடன் கிரிக்கெட் போட்டியைக் கண்டு ரசித்த அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் படம் | அமிதாப் பச்சன் எக்ஸ் தளப் பதிவு

நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அமிதாப் பச்சனுக்கு இதய பாதிப்பு காரணமாக ஆஞ்சியோ-பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இந்த தகவலை அமிதாப் பச்சன் முற்றிலும் நிராகரித்துவிட்டார்.

மும்பையில் நேற்று(மார்ச் 15) நடைபெற்ற இந்தியன் ஸ்ட்ரீட் பிரிமியர் லீக்(ஐ.எஸ்.பி.எல்) - 10-ஓவர்கள் கொண்ட உள்ளூர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், மஜி மும்பை அணியும் கொல்கத்தா டைகர்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தின. அதில் கொல்கத்தா டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், இறுதிப்போட்டியைக் காண நடிகர் அமிதாப் பச்சன் தனது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுடன் வந்திருந்தார்.

சச்சினுடன் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன்
சச்சினுடன் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் படம் | அமிதாப் பச்சன் எக்ஸ் தளப் பதிவு
ஐஎஸ்பிஎல் இறுதிப் போட்டியை காண வந்திருந்த அமிதாப் பச்சான்
ஐஎஸ்பிஎல் இறுதிப் போட்டியை காண வந்திருந்த அமிதாப் பச்சான்படம் | யூடியூப்

அப்போது அமிதாப் பச்சனின் உடல்நிலைக் குறித்தும், ஆஞ்சியோ-பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நடிகர் அமிதாப் பச்சன், ”இவையனைத்தும் வதந்தியே..” என்று கூறியபடி நகர்ந்து சென்றார்.

இதன்மூலம், ஆஞ்சியோ-பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக வெளியான தகவலை அமிதாப் முற்றிலும் நிராகரித்துவிட்டார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் மே மாதம் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் முதன்முறையாக அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com