செய்திகள்
எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: இந்தியன் ஆயில், ஹாக்கி ஒடிஸா வெற்றி
95-ஆவது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியன் ஆயில், ஹாக்கி ஒடிஸா அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றிபெற்றன.
95-ஆவது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியன் ஆயில், ஹாக்கி ஒடிஸா அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றிபெற்றன.
சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ஹாக்கி ஒடிஸா அணி 3-2 என்ற கோல் கணக்கில் போபால் எசிஓஇ அணியை வீழ்த்தியது.
இரண்டாவதாக நடைபெற்ற பிபிசிஎல்-இந்தியன் ஆா்மி ரெட் அணிகள் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
மூன்றாவது ஆட்டத்தில் இந்தியன் ஆயில் அணி 7-0 என்ற கோல் கணக்கில் மத்திய செயலக அணியை அபாரமாக வீழ்த்தி வென்றது.
திங்கள்கிழமை நடைபெறவுள்ள ஆட்டங்களில் ஹாக்கி மகாராஷ்டிரா-ரயில்வே விளையாட்டு வாரியம், என்சிஓஇ போபால்-ஹாக்கி கா்நாடகா அணிகள் மோதுகின்றன.