ஹிந்தியில் வெளியாகி கவனம்பெற்ற ஹோம்பவுண்ட் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப்பட்டியலுக்குத் தேர்வாகியுள்ளது.
மசான் திரைப்படம் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் நீரஜ் கய்வான் இயக்கத்தில் நடிகர்கள் இஷான் கட்டர், விஷால் ஜேத்வா, ஜான்வி கபூர் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான திரைப்படம் ஹோம்பவுண்ட்.
இந்திய சமூகத்தில் நிகழும் தீண்டாமை, ஏற்றத்தாழ்வுகளை அரசியல் அதிகார பின்னணியில் பதிவு செய்ததுடன் நாட்டில் சிறுபான்மையினர் சந்திக்கும் அவலங்களையும் இப்படம் பதிவு செய்திருந்தது.
திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று கவனம் பெற்ற இப்படம் இயக்குநர் மார்டின் ஸ்கார்சஸி போன்ற உலகின் பிரபல இயக்குநர்கள் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றது.
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான பின் இந்தியளவில் இப்படம் பேசப்பட்டதுடன் பலரும் தங்களை மிகவும் தொந்தரவு செய்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில், ஆஸ்கர் விருதுக்கான சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் தகுதிப் பட்டியலில் ஹோம்பவுண்ட் திரைப்படம் தேர்வாகி அசத்தியுள்ளது. அடுத்தாண்டு ஜனவரில் இறுதிப்பட்டியல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.