பராசக்தி மேக்கிங் விடியோ! சுதா கொங்கரா பிறந்த நாள் பரிசு!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் மேக்கிங் விடியோ குறித்து...
Parasakthi making scene...
பராசக்தி மேக்கிங் காட்சி... படம்: எக்ஸ் / டான் பிக்சர்ஸ்.
Published on
Updated on
1 min read

இயக்குநர் சுதா கொங்கராவின் பிறந்த நாளுக்காக பராசக்தி படக்குழு மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளது.

இறுதிச் சுற்று, சூரரைப் போற்று என்ற வெற்றிப் படங்களின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி எனும் படத்தை எடுத்து வருகிறார்.

இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். மேலும், இந்தப் இந்தப் படத்தில், நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தெலுங்கு பிரபலம நடிகை ஸ்ரீலீலாவும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

பழைய மெட்ராஸ் நகரில் நடைபெறும் வரலாற்று கதைக் களமாகக் காணப்படும் இந்தப் படத்தின், அறிவிப்பு வெளியான நாள்முதல் அனைவரது ரசிகர்களிடையும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் இயக்குநர் சுதா கொங்கரா, “பெரும்பாலான காட்சிகள் படம் பிடிக்கப்பட்டது. இன்னும் 40 நாள்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இயக்குநர் சுதா கொங்கராவின் பிறந்தநாளை முன்னிட்டு பராசக்தி படக்குழு மேக்கிங் விடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Summary

The Parasakthi team has released a making video to celebrate director Sudha Kongara's birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com