திரையரங்கில் எடுத்த காட்சிகளை சமூக வலைதளத்தில் பரப்பாதீர்கள்: பெத்லகேம் குடும்ப யூனிட் தயாரிப்பாளர்
சினிமா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்து...

பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / பாவனா ஸ்டூடியோஸ்
திரையரங்கில் எடுத்த காட்சிகளை சமூக வலைதளத்தில் பரப்பாதீர்கள் என பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சினிமா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிரீஸ் ஏடி இயக்கத்தில் நிவின் பாலி - மமிதா பைஜூ நடிப்பில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் கடந்த ஆக.21ஆம் தேதி வெளியானது.
மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வரும் இந்தப் படத்தினை திலீஷ் போத்தன், ஃபஹத் ஃபாசில் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் மமிதா, நிவின் பாலி உடன் சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் வரும் முக்கியமான காட்சிகளை ரசிகர்கள் திரையரங்கில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். இது குறித்து தயாரிப்பு நிறுவனம் பாவனா ஸ்டூடியோஸ், தயாரிப்பாளர் திலீஷ் போத்தன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளதாவது:
உலக அளவில் வரவேற்பை அளிக்கும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி. திரையரங்கில் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் ரசிகர்கள், முன் எப்போதும் நிகழ்ந்திராத அளவுக்கு முன்பதிவு செய்யப்பட்டு வருவதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
தாழ்மையுடன் ஒரு வேண்டுகோள்: திரையரங்கில் படக் காட்சிகளை பதிவு செய்யாதீர்கள். அந்தக் காட்சிகளை சமூக வலைதளத்தில் பரப்பாதீர்கள். ஏனெனில், உங்களைப் போலவே மற்றவர்களும் பெரிய திரையில் அந்த மேஜிக், அனுபவத்தைப் பெற வேண்டும்.
அனைவருக்கும் சிறப்பான அனுபவத்தை அளியுங்கள். அன்புடன் பாவனா ஸ்டூடியோஸ் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
REQUEST YOUR ATTENTION â¼ï¸#NivinPauly #MamithaBaiju #BethlehemKudumbaUnit #BKU pic.twitter.com/c0WUUU6aML
— Bhavana Studios (@BhavanaStudios) August 24, 2026
Summary
Do not circulate footage recorded in the theatre on social media: Bethlehem Kudumba Unit Producer
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






