சுடச்சுட

  

  சிம்புவின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார்? திரிஷாவா... ஷ்ரேயாவா...?

  By DIN  |   Published on : 22nd August 2016 06:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Shreya

  திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார் சிம்பு. "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சிம்புவுக்கு மூன்று வேடங்கள் என கூறப்படுகிறது. இதில் நடுத்தர வயது சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா, ஸ்ரேயா இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதில் பெரும்பாலும் ஸ்ரேயா ஒப்பந்தம் ஆவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வேடத்தில் ராதிகா ஆப்தே நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார் சிம்பு. இதற்காக ராதிகா ஆப்தேவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிம்புவின் இந்த அழைப்பை ராதிகா ஏற்க மறுத்து விட்டதாகத் தெரிகிறது. பெங்காலி படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் இல்லை என்று கூறி விட்டார் ராதிகா. இதனால் ஸ்ரேயாவுக்கே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். த்ரிஷா ஏற்கெனவே "அலை', "விண்ணைத்தாண்டி வருவாயா' என சிம்புவுடன் நடித்து விட்டதால், த்ரிஷாவை மறுத்துள்ளது இயக்குநர் தரப்பு. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai