சுடச்சுட

    

    தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கும் தமிழ்ப்படம் 'லைலா ஓ லைலா'

    By DIN  |   Published on : 22nd August 2016 06:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Naga_Chaitanya_10

    தெலுங்கில் வெற்றிகரமான நடிகராக திகழும் நாக சைதன்யா, தமிழுக்கு வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் "ஒக்க லைலா கோசம்'. இப்படம் தெலுங்கில் பரவலான வெற்றியைப் பெற்றது. தற்போது இந்தப் படம் தமிழில் "லைலா ஓ லைலா' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. நாக சைதன்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பிரபு, சுமன், ஷாயாஜி ஷிண்டே, நாசர், பிரம்மானந்தம், ஆலி, ஆசிஷ் வித்யார்த்தி, சுப்ரீத் ஆகியோர் நடித்துள்ளனர். கே.விஜயகுமார் எழுதி இயக்கியுள்ளார். பணக்கார வாலிபனான நாகசைதன்யா ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். காதலை ஏற்காத அந்த பெண் விலகி நிற்கிறாள். இதற்கிடையே அந்த பெண்ணிற்கும், நாக சைதன்யாவிற்கும் திருமண ஏற்பாடு எதேச்சையாக நடக்கிறது. ஆனால் நாக சைதன்யா அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுகிறார். விருப்பப்பட்ட பெண்ணே கிடைக்கும் போது நாக சைதன்யா மறுக்க என்ன காரணம்? என்பதுதான் படத்தின் திரைக்கதை. விரைவில் படம் வெளியாக உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai