சுடச்சுட

  

  'புண்ணியகோடி' - முதல் சம்ஸ்கிருத அனிமேஷன் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா

  By DIN  |   Published on : 22nd August 2016 06:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  illayaraja-story_647_081615014704

  இந்தியாவின் முதல் சமஸ்கிருத அனிமேஷன் படமாக உருவாகிறது "புண்ணியகோடி.' மனிதனின் பேராசையால் இயற்கைக்கு உருவாகும் தீங்கை சொல்லுவதாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கருநாடு என்னும் கிராமத்தில் உண்மையை மட்டும் உரைக்கும் பசு மாடு வாழ்கிறது. புண்ணியகோடி என்னும் அந்த பசு மாட்டை புலி பிடித்து விடுகிறது. அப்போது புண்ணியகோடி புலியிடம், ""நான் என் கன்றுக்கு பால் கொடுக்க வேண்டும். ஆதலால் என்னை விடுவிக்க வேண்டும். என் கன்றுக்கு பால் கொடுத்த பிறகு நான் திரும்பி வருகிறேன்'' என்று கேட்கிறது. பிறகு புண்ணியகோடி தன் கன்றின் பசியாற்றியதா? அந்த புலி புண்ணியகோடியை என்ன செய்தது? என்பது கிளைமாக்ஸ். அனிமேஷன் துறையில் புகழ் பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். இளையராஜா படத்துக்கு இசையமைக்கிறார். நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரமான புண்ணியகோடிக்கு குரல் கொடுக்கிறார். ரவி சங்கர் எழுதி இயக்குகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai