சுடச்சுட

  

  விஜய்யின் 60-வது படத் தலைப்பு என்ன? உலாவரும் வதந்திகள்!

  By DIN  |   Published on : 22nd August 2016 06:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vijay-house-chennai-10-1455089898

  "தெறி' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை பரதன் இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பி.வெங்கட்ராம் ரெட்டி தயாரிக்கிறார். விஜய்யின் 60-ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், இப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்துக்கு "எங்கள் வீட்டுப் பிள்ளை' என பெயரிடப்பட்டுள்ளதாக கடந்த வாரத்தில் தகவல் கசிந்தது. இது தொடர்பான போஸ்டர் வடிவங்களும் இணையத்தில் உலா வந்தன. எம்.ஜி.ஆரின் "எங்கள் வீட்டு பிள்ளை' படத்தைத் தயாரித்த நிறுவனம் விஜயா புரொடக்ஷன்ஸ் என்பதால், இத்தலைப்பு உறுதியானதுதான் என பேசப்பட்டது. இந்நிலையில் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை என விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. "எங்கள் வீட்டு பிள்ளை' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று வெளியான தகவல் பொய்யானது. இது தவறான செய்தி. அந்தப் பெயரை சூட்டும் எண்ணம் இல்லை. சிலர் பரப்பி வரும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம். எங்களிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வரும்'' என விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai