சுடச்சுட

  
  udhai

  "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்துக்குப் பின் எழில் இயக்கும் படத்தில் நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதியின் அடுத்தப் படத்தை எழில் இயக்குகிறார் என செய்திகள் வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வந்தது. பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த வாரம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு காரைக்காலிலும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகளிலும் நடக்கவுள்ளது. இப்படத்தின் விநியோக உரிமை இப்போதே விற்கப்பட்டு விட்டது. கோவை கந்தசுவாமி கலை கூடத்தின் ராஜமன்னார், தற்போது இந்த படத்தின் விநியோக உரிமையை குறைந்தபட்ச உத்தரவாத அடிப்படையில் வாங்கி இருக்கிறார். ஆக்ஷன், காதல், நகைச்சுவை ஆகிய அம்சங்கள் அடங்கிய கமர்ஷியல் படமாக இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. உதயநிதிக்கு ஜோடியாக மீண்டும் ஹன்சிகாவுக்கே வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai