சுடச்சுட

  
  kamal

  கலைத்துறைக்குச் சேவையாற்றி வரும் கமல்ஹாசனுக்கு செவாலியே விருது அளித்து சிறப்பு செய்து இருக்கிறது பிரான்ஸ் அரசு. எலும்பு முறிவு சிகிச்சைக்காக வீட்டில் ஓய்வெடுத்து வரும் கமலுக்கு இந்த விருது பெரும் ஆறுதல். கமலை உடனிருந்து கவனித்து வரும் கௌதமி விருது குறித்து பேசினார்... ""செவாலியே விருது செய்தி வரும் போது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார். நடப்பதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு இருந்தார். பொதுவாக எந்த விருதுக்கும் பெரிதாக ரியாக்ஷன் காட்டாதது அவரது குணம். இந்த விருதுக்கும் அப்படித்தான் பணிவோடு இருந்தார். கமல் சார் நடிப்புத் திறமையைப் பற்றி கமென்ட் செய்யும் அளவுக்கு நான் வளரவில்லை. அதுபற்றி கேட்டால் என்னால் பதில் சொல்லவே முடியாது. சிவாஜி சாருக்கு செவாலியே விருது தரப்பட்டதால், அந்த விருது தன் தகுதியை அடுத்தகட்டத்துக்கு உயர்த்திக் கொண்டது. இப்போது அந்த விருதுக்கு இன்னும் மதிப்பு கூடி இருக்கிறது'' என்றார் கௌதமி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai