சுடச்சுட

  
  remo

  பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் "ரெமோ' வரும் அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரெமோவிற்கு ரெங்கநாதன் என்கிற மோனகா என்ற விளக்கம் தரப்பட்டுள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன. ஏனெனில் வரிவிலக்கு பெறுவதில் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக வழக்கமாக சில படங்கள் கடைசி நேரத்தில் பெயர் மாற்றப்படும். அதுபோல ரெமோவிற்கும் பெயர் மாற்றுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.
   படக்குழுவோ இந்த விளக்கத்தை திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. தவிர, ரெமோ என்பது பெயர்ச் சொல்தான். அதனால் எந்த பிரச்னையும் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளது. பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட், அனிருத் என்று பல முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய படமாக உருவாகி வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai