சுடச்சுட

  

  லாஸ் வேகாஸில் படமாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம்..!

  By DIN  |   Published on : 27th August 2016 02:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kaviyan

  முழுக்க முழுக்க அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நகரத்தில் உருவாகும் படமாகத் தயாராகி வருகிறது "காவியன்'. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை 2எம் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தொன்மை வாய்ந்த அந்த நகரத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவுள்ளது. ஷாம் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மனம் கொத்திப் பறவை படத்தில் நடித்த ஆத்மியா நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக ஸ்ரீதேவி குமார் நடிக்கிறார். ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்கள் ஏற்கிறார்கள். அமெரிக்காவில் படப்பிடிப்பு நடப்பதால் பல ஹாலிவுட் நடிகர்களையும் இதில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். நவி சதிஷ்குமார் வசனம் எழுதுகிறார். ஷ்யாம் மோகன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai