நான்கு நபர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "ஓடு ராஜா ஓடு.' நகைச்சுவையுடன் த்ரில்லர் பாணியில் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. "ஜோக்கர்' படத்துக்குப் பின் குரு சோமசுந்தரம் நடிக்கிறார். ஆனந்த்சாமி, லெட்சுமி பிரியா, சாருஹாசன், நாசர், ஆஷிகா சல்வான், ரவிந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், மெல்வின் எம். ரஞ்சன், வினு ஜான், சோனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எல்.வி.பிரசாத் அகாதெமியின் பட்டதாரிகளான நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜதின் ஷங்கர் ராஜ் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர். மூலன் குரூப் நிறுவனத்தின் தலைவர் விஜய் மூலன் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.