காதலிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்ட ஒரு சராசரி இளைஞனின் கதை இது!

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் தமிழரசன்
காதலிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்ட ஒரு சராசரி இளைஞனின் கதை இது!

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் தமிழரசன்'. 'திமிரு பிடிச்சவன்' படத்துக்குப் பின் மீண்டும் இதில் போலீஸ் வேடமேற்று நடிக்கிறார் விஜய் ஆண்டனி. எஸ்.என்.எஸ். மூவீஸ் நிறுவனம் சார்பில் கௌசல்யா ராணி இப்படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி நடைபெற்று வந்தது. விஜய் ஆண்டனிக்கு கதையில் ஜோடி யார்? என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் ரம்யா நம்பீசன் இப்படத்தின் கதாநாயகியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே 'சைத்தான்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ரம்யா நம்பீசன் நடித்திருந்தார். இப்போது முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் சோனு சூட் நடிக்கிறார். பூமிகா, யோகி பாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

**

பல அரசியல் குழப்பங்கள், பொருளாதாரச் சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் எனத் தொடர்ந்து தமிழ்நாடு சிக்கல்களைச் சந்தித்து வரும் வேளையில், இதனைப் பிரதிபலிக்கும் வகையில் 'நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு'" என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி நல்.செந்தில்குமார் இயக்குகிறார். அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு கிராமத்தில் இதுவரை எந்தத் தலைமுறையும் சந்திக்காத, பார்க்காத பல்வேறு மர்மமான சம்பவங்களும், பிரச்னைகளும் அடுத்தடுத்துத் தொடர்ந்து நடக்கின்றது. ஒரு கட்டத்தில் பிரச்னைகள் தீவிரமடைந்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்து தனது கிராமத்தையும், மக்களையும் கதாநாயகன் எப்படிக் காப்பாற்றினார் என்பதைச் சொல்லுவதே திரைக்கதை.

ஜி.எஸ். ஆர்ட்ஸ் சார்பில் பூக்கடை ஜி.சேட்டு தயாரிக்கிறார். கதாநாயகனாக மகேந்திரன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ நடித்திருக்கிறார். ஆர். சுந்தர் ராஜன், மனோஜ் குமார், "பசங்க' சிவக்குமார், அப்புக் குட்டி, தவசி, பெஞ்சமின், லொள்ளு சபா உதயா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். ஒளிப்பதிவு- ஜெ.ஆர்.கே. படத்தொகுப்பு - கம்பம் மூர்த்தி. நடனம் - தினா, ரமேஷ், சண்டை பயிற்சி - மிரட்டல் செல்வா. பாடல்கள் - ஜீவன் மயில், மோகன்ராஜ். இசை - ஸ்ரீகாந்த் தேவா.

**

ராஜி நிலா முகில் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'மாயநதி'. "பட்டதாரி', "கேரள நாட்டிளம் பெண்களுடனே' ஆகியப் படங்களில் நடித்த அபி சரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். "காதல் கசக்குதய்யா', "பள்ளி பருவத்திலே' ஆகியப் படங்களில் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் "ஆடுகளம்' நரேன், அப்புக்குட்டி, தமிழ் வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி அஷோக் தியாகராஜன் இயக்குகிறார். இயக்குநர் பேசும் போது... "மகள் மீது பாசமும், அதீத நம்பிக்கையும் கொண்ட ஒரு தந்தை, டாக்டராவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு பெண், இலக்குகள் ஏதுமின்றி காதலிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு சராசரி இளைஞன். இவர்களைப் பற்றிய சுவாரசியமான நிகழ்வே இந்தப் படம்.

பருவ வயதில் இயல்பாக ஏற்படும் காதல் அல்லது இனக்கவர்ச்சியைக் கடந்து ஒரு பெண்ணால் தனது லட்சியத்தை அடைய முடிந்ததா? என்பதைச் சொல்லுவதே திரைக்கதை. பவதாரிணி இசையமைத்து ஒரு பாடலையும் பாடியுள்ளார். பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்கிறார். மயிலாடுதுறை, பொறையாறு, தரங்கம்பாடி, திருக்கடையூர் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com