கோடி ரூபாய் கொடுத்தால் பிரசாரத்துக்கு செல்வீர்களா? நடிகை ஓவியாவுக்கு வந்த வாய்ப்பு!

தேர்தலுக்கான கூட்டணி விவகாரங்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் தங்கள் கட்சியின் பிரசாரத்திற்கு பயன்படுத்த பிரபல நடிகர், நடிகைகளை இழுக்கும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது.
கோடி ரூபாய் கொடுத்தால் பிரசாரத்துக்கு செல்வீர்களா? நடிகை ஓவியாவுக்கு வந்த வாய்ப்பு!


தேர்தலுக்கான கூட்டணி விவகாரங்கள் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் தங்கள் கட்சியின் பிரசாரத்திற்கு பயன்படுத்த பிரபல நடிகர், நடிகைகளை இழுக்கும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள "90 எம்.எல்' படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இது குறித்து அவர் பேசும் போது... ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டு பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற மைய கருவை வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அரசியல்வாதிகள் சிலர் தங்களது கட்சியில் சேர அழைப்பு விடுத்தார்கள். மறுத்துவிட்டேன். என்னை கட்சியில் சேர அழைத்தது யார் என்பதை சொல்ல விரும்பவில்லை. கோடி ரூபாய் கொடுத்தால் பிரசாரத்துக்கு செல்வீர்களா? என்று கேட்டால் நிச்சயம் மாட்டேன். கோலிவுட்டில் நடிகையாக நல்லதொரு இடத்தை பிடிக்கவே ஆசைப்படுகிறேன்'’ என்று தெரிவித்துள்ளார்.   

**

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்த 2 பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படையினர் துரத்தி சென்று சுட்டு வீழ்த்தினர். இதில் இந்தியா விமானம் ஒன்றும் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்த நிலையில் அதிலிருந்த இந்திய வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்தது. பேச்சுவார்த்தைக்கு பிறகு அபிநந்தன் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினார்.  நடிகர், நடிகைகளும் வரவேற்றுள்ளனர். அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் நடிகை ராக்கி சாவந்த்,  பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவேன் என ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "" நாட்டிற்காக நான் என் உயிரையும் கொடுப்பேன். தேவைப்பட்டால்  வெடி குண்டுகளுடன் எதிரியின் எல்லைக்குள் சென்று அவர்களை அழிப்பேன்'' என ஆவேசப்பட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதமாகியுள்ளது.   

**

நடிகை பிரியங்கா சோப்ரா வெளிநாட்டு பாப் பாடகர் நிக் ஜோனûஸ காதலித்து மணந்தார். பிரியங்காவை விட  நிக் ஜோனஸ் வயது குறைந்தவர் என்பதால் அது சர்ச்சையாக பேசப்பட்டது. இதுபற்றி இருவரும் கண்டுகொள்ளாமல் திருமண சந்தோஷத்தில் மூழ்கியிருந்ததுடன் தேனிலவிற்காக வெளிநாடுகளில் சுற்றி வந்தனர். திருமணம், தேனிலவு முடிந்தபிறகும் இருவரும் ஒரு சில இடங்களில் நட்பு வட்டாரத்துக்காக திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொண்டாடினர். திருமண பரபரப்பு முடிந்து சகஜ நிலைக்கு தம்பதிகள் திரும்பியிருக்கின்றனர். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, ஒருவர் ""நீங்கள் ஹிந்திக்காரரா''  என்றார்.  அதற்கு பதில் அளித்த பிரியங்கா, ""ஹிந்தி இல்லை, நான் இந்து. ஹிந்தி என்பது ஒரு மொழி, ஹிந்து என்பது மதம். இரண்டு வார்த்தைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்''  என்றார். ""நீங்கள் சைவமா, அசைவமா'' என்று ஒருவர் கேட்டபோது, ""நான் சைவம் கிடையாது'' என்றார். அதேபோல் இன்னொருவர், ""உங்கள் கணவர் நிக் ஜோனûஸ விட  உங்களுக்கு வயது அதிகமா?'' என்றார். அதைக்கேட்டு ஷாக் ஆன பிரியங்கா, ""ஆமாம், எனக்கு 10 வயது அதிகம்தான் இப்ப அதற்கென்ன'' என்பதுபோல் பதில் அளித்தார்.  

**

'மணிகர்னிகா' என்ற ஹிந்தி படத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாய் கேரக்டரில் நடித்த கங்கனா ரனாவத், இந்த படத்தின் 30 சதவீத காட்சிகளை அவரே இயக்கினார். இப்படத்துக்கு பரவலான வரவேற்பு கிடைத்தது.  இதையடுத்து அவர் தன் வாழ்க்கை கதையை படமாக்க  திட்டமிட்டுள்ளார். இது குறித்து பேசும் போது, ரசிகர்கள் கொடுத்த ஆதரவு  காரணமாக, பாலிவுட்டில் எனக்கென தனி இடம்  உருவாகியுள்ளது. இதன் மூலம் ஒரு கதாநாயகியாக வெற்றிபெற்று இருக்கிறேன். அடுத்து என் வாழ்க்கை கதையை படமாக்குகிறேன். இதை  நானே இயக்குகிறேன். 'பாகுபலி', 'மணிகர்னிகா' படங்களுக்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார். இப்படத்தில் என் வாழ்க்கையில் நடந்த முக்கிய  சம்பவங்கள் மற்றும் என்னுடன் நெருங்கிப் பழகியவர்கள் குறித்து சொல்கிறேன். ஆனால், தனிப்பட்ட முறையில் எதையும் விமர்சனம் செய்தோ அல்லது யாரையும் தாக்கியோ படமாக்க மாட்டேன். நல்ல விஷயங்கள் மட்டுமே இருக்கும்' என்றார். 

**

நடிகர், நடிகைகள் பலர் பிராணிகள் மற்றும் விலங்குகள் பராமரிப்புக்கு அதிகம் செலவு  செய்கின்றனர். வளர்ப்பு விலங்குகளை வீட்டில் வளர்க்கும் நட்சத்திரங்கள் அவர்களுடன் அன்பாக பழகுகின்றனர். அவ்வப்போது அவற்றுடன் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். இந்த வரிசையில் ஒரு மாற்றாக பூங்காவில் பராமரிக்கப்படும் புலி ஒன்றை தத்தெடுத்துள்ளார் விஜய் சேதுபதி.  சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. அங்கு கடந்த 2010-ஆம் ஆண்டு, இங்குள்ள விலங்குகளை பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், தனியார் வங்கிகள், நடிகர்கள் போன்றோர் தத்தெடுத்து வளர்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் பூங்காவிற்கு சென்ற விஜய் சேதுபதி, ஆதித்யா, ஆர்த்தி என்ற 2 வங்கப் புலிகளை ஆறு மாதத்திற்கு தத்தெடுத்தார். மேலும் இவை இரண்டிற்கும் 6 மாதத்திற்கு தேவையான உணவுகளை வழங்குவதற்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை உயிரியல் பூங்காவின் அதிகாரியிடம் வழங்கினார் விஜய் சேதுபதி.  இது குறித்து,  ""நான் 6-ம் வகுப்பு படிக்கும்போது வண்டலூர் பூங்காவிற்கு வந்துள்ளேன்.  அப்போது இங்கு விலங்குகள் மிகவும் குறைவாக இருந்தது. இப்போது இங்குள்ள புலிகளை தத்து எடுப்பதில் பெருமை கொள்கிறேன்'  என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com