ஏக் தோ தீன், தக் தக்...: சரோஜ் கான் சிறப்பாக நடனம் அமைத்த புகழ்பெற்ற பாடல்கள்! (விடியோ)

பாலிவுட் நடனத்தைத் தனக்குக் கற்றுக்கொடுத்தவர் சரோஜ் கான் என ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் பிரபல நடிகை மாதுரி தீட்சித்.
ஏக் தோ தீன், தக் தக்...: சரோஜ் கான் சிறப்பாக நடனம் அமைத்த புகழ்பெற்ற பாடல்கள்! (விடியோ)

பாலிவுட் நடனத்தைத் தனக்குக் கற்றுக்கொடுத்தவர் சரோஜ் கான் என ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் பிரபல நடிகை மாதுரி தீட்சித். பாலிவுட்டில் சிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவரான சரோஜ் கான் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

சிறுவயதில் ஒரு நடிகையாக பாலிவுட்டில் அறிமுகமான சரோஜ் கான், பிறகு 1950களில் நடனக் கலைஞராக மாறினார். நடன இயக்குநர் ஷோகன் லாலிடம் பணியாற்றினார். 1974-ல் வெளியான கீதா மேரா நாம் படத்தில் நடன இயக்குநராக அறிமுகமானார். சாந்தினி, நகினா ஆகிய படங்களில் ஸ்ரீதேவியின் நடனங்களுக்கு வடிவமைத்து பாராட்டுகளைப் பெற்றார்.

1980களின் இறுதிகளில் பாலிவுட்டின் பிரபல நட்சத்திரம் ஆனார். மாதுரி தீட்சித்துடன் பணியாற்றிய பிறகு அதிகப் புகழை அடைந்தார் சரோஜ் கான். இந்தியா முழுக்கப் புகழ்பெற்ற ஏக் தோ தீன் பாடலுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியவர் சரோஜ் கான் தான். தர், பாஸிகர், தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே, பர்தேஸ், தால், லகான், மணிகர்னிகா போன்ற ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார். 

40 வருடங்களாகக் கிட்டத்தட்ட 2000 பாடல்களுக்கு மேல் நடனம் வடிவமைத்துள்ளார் சரோஜ் கான். தேவ்தாஸ், ஜப் வீ மெட், ஸ்ரீரங்கம் (தமிழ்) ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளைப் பெற்றார். சில படங்களுக்குத் திரைக்கதை அமைத்துள்ள சரோஜ் கான், நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார். 

சரோஜ் கான் சிறப்பாக நடனம் அமைத்த பாடல்களின் தொகுப்பு:

Ek Do Teen – Tezaab (1988)

Hawa Hawai – Mr. India (1987)

Dola Re – Devdas (2002)

Nimbooda – Hum Dil De Chuke Sanam (1994)

Mere Hathon Me Nau Nau Chudiyan – Chandni (1989)

Yeh Ishq Haaye – Jab We Met (2007)

Dhak Dhak – Beta (1992)

Yeh Kaali Kaali Aankhen – Baazigar (1993)

Mera Piya Ghar Aaya – Yaraana (1995)

Chane Ke Khet Mein – Anjaam (1994)

Barso Re – Guru (2007)

Radha Kaise Na Jale – Lagaan (2001)

Choli Ke Peeche – Khalnayak (1994)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com