பட்டுக்கோட்டையும் கொட்டைப்பாக்கும்

தீ விபத்தினால் எத்தனையோ ஆயிரக்கணக்கான ரூபாய் சேதம் ஏற்பட்டு வருகிறது. சட்டம், அமைதி, பாதுகாப்பு எங்கே என்று கேட்கிறேன். உங்கள் ஆட்சியில் ஏழைகள் குடிசையில் வாழ்வதற்குக்கூட

(1968 ஆகஸ்ட் : தமிழக அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்)

பி.ஜி. கருத்திருமன்: தீ விபத்தினால் எத்தனையோ ஆயிரக்கணக்கான ரூபாய் சேதம் ஏற்பட்டு வருகிறது. சட்டம், அமைதி, பாதுகாப்பு எங்கே என்று கேட்கிறேன். உங்கள் ஆட்சியில் ஏழைகள் குடிசையில் வாழ்வதற்குக்கூட பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்பது என்னுடைய குற்றச்சாட்டு.

மாண்புமிகு சி.என். அண்ணாதுரை: எதிர்க்கட்சித் தலைவருக்கு ஏழைக்குப் பரிந்து பேச சந்தர்ப்பம் கிடைத்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். தீ விபத்துகளுக்காக இந்த அரசும், அதைச் சார்ந்தவர்களும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களைப் போலவே வருத்தப்படுகிறோம். தீ விபத்து ஏற்படுத்துவதற்கும் சட்டம், அமைதி குலைந்திருப்பதற்கும் என்ன பொருத்தம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. போன மாதத்தில் பம்பாய் நகரில், நான்கைந்து மாடிக் கட்டடம் தீ விபத்தினால் எரிந்து போயிற்றே, பல லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டமாகிவிட்டதே, அதனால் அங்கே சட்டம், அமைதி குலைந்துவிட்டது என்று அர்த்தமா? பதில் சொல்ல வேண்டாம், எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பி.ஜி. கருத்திருமன்: தீவிபத்து ஒரு பகுதிதான். மற்றவற்றையும் எடுத்துச் சொல்வதற்குள், முதலமைச்சர் அவர்கள் அவசரப்பட வேண்டாம். முதலமைச்சர் அவர்கள் இப்படிச் சொல்வது - "கொட்டைப்பாக்கு என்ன விலை என்று கேட்டால், பட்டுக்கோட்டைக்கு வழி சொன்னானாம்' என்பது போல இருக்கிறது.

சி.என். அண்ணாதுரை: இது ரொம்ப நாளாக இருந்துவரும் பழமொழி, இரண்டுக்கும் நடுவில் ஒன்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பட்டுக்கோட்டையில் கொட்டைப்பாக்கு மலிவாகக் கிடைக்கும் என்று வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

பி.ஜி. கருத்திருமன்: முதலமைச்சர் அவர்கள் பட்டுக்கோட்டையில் கொட்டைப்பாக்கு வியாபாரம் செய்தது எனக்குத் தெரியாது. அதற்காக என் நன்றியறிதலைச் சொல்லிக் கொள்கிறேன்.

(1968-ஆம் ஆண்டு சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் குறித்த இந்தத் தொகுப்பு 4.2.1993 தினமணியில் வெளியானது).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com