பாரதியின் பாதையில் பயணம்!

நான் கடந்த 60 ஆண்டுகளாக தினமணியை படித்து வருகிறேன். தினமணி பத்திரிகையின் ஆசிரியராக ஏ. என். சிவராமன் இருந்த காலம் தொடங்கி, இன்றைக்கு கி. வைத்தியநாதன் ஆசிரியராக இருக்கக்கூடிய
இளசை மணியன்
இளசை மணியன்

நான் கடந்த 60 ஆண்டுகளாக தினமணியை படித்து வருகிறேன். தினமணி பத்திரிகையின் ஆசிரியராக ஏ.என். சிவராமன் இருந்த காலம் தொடங்கி, இன்றைக்கு கி. வைத்தியநாதன் ஆசிரியராக இருக்கக்கூடிய இந்த காலகட்டம் வரை அனைத்து ஆசிரியர்களுடைய பல்வேறு கட்டுரைகளை, தலையங்கங்களை நான் படித்து இருக்கிறேன்.

தினமணியின் தலையங்கத்திற்கு நிகர் இல்லை. துல்லியமாக பிரச்னை என்ன என்பதைத் தெளிவுபடுத்தக்கூடிய ஒரு சிறந்த கட்டுரையாகவே தலையங்கம் அமைந்திருக்கிறது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதன் கடந்த கால நிகழ்வுகள், நிகழ்காலப் பிரச்னைகள், எதிர்காலத்துக்கு தேவையான நிரந்தரத் தீர்வுகள் என இந்த மூன்றையும் தெளிவுபடுத்தி, இன்றைக்கு என்ன தேவை என்பதை வலியுறுத்தக்கூடிய முறையில் தலையங்கம் வெளிவருவது சிறப்புக்குரியது.

தமிழ் இலக்கியத்தில் புகழ்மிக்க எழுத்தாளர்கள் குறிப்பாக புதுமைப்பித்தன், ஜீவானந்தம் போன்ற பல எழுத்தாளர்கள், ஆளுமைகள் பற்றி எல்லாம் விரிவான இலக்கியக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தமிழுக்கு பங்காற்றி தங்களையே அர்ப்பணித்த பல பெரியோர்களை சான்றோர்களை பற்றியும் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.

பாரதியை பற்றி இதுவரை வெளிவராத பல கட்டுரைகள், பல செய்திகள் எல்லாம் தினமணியின் இலக்கிய பகுதியில் கட்டுரையாக வந்திருக்கின்றன. பாரதியின் இலக்கிய வடிவத்தை, பாரதியின் தத்துவத்தை, தேசிய விடுதலை, பெண்ணியம், சமூக சீர்திருத்தம், தேசிய கல்வி, நாகரிகம், கலாசாரம், பண்பாடு, சமூக ஒழுக்கம், சமூக நீதி என பல்வேறு விவரங்களை எல்லாம் ஆழமாகவும், மிகவும் தெளிவாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய முறையிலேயே தாங்கி "தினமணி' நாளும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

"கலாரசிகன்' என்ற பெயரில் தினமணியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை புதிய பல கவிஞர்களை அறிமுகப்படுத்தும் பாங்கு அலாதியானது. வித்தியாசமானது. எல்லோர் நெஞ்சிலும் அது நிறைந்திருக்கும் முறையில் உள்ளது.

மொத்தத்தில் தினமணியின் செய்திகள் அது வெளிவரக் கூடிய தன்மைகள், செய்தி விமர்சனக் கட்டுரைகள், தனி கட்டுரைகள், இலக்கியப் பதிவுகள், தினமணி இணைப்புகள் எல்லாம் தினமணி வாசகர்கள் வாழ்வில் ஒரு படிக்கட்டாகத் திகழ்கின்றன.

என்னைப் பொருத்தவரை எனது எழுத்துப் பயணத்தில், இலக்கியத் தடத்தில் நான் வளர்ச்சி அடைவதற்கு ஒரு படிக்கல்லாக தினமணி இருந்திருக்கிறது என்பதை 85 ஆவது ஆண்டுவிழாவில் மனப்பூர்வமாக பதிவு செய்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com