Enable Javscript for better performance
போக்குவரத்து கழகங்களைக் காக்க அரசு நிதியுதவி அளிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    போக்குவரத்து கழகங்களைக் காக்க அரசு நிதியுதவி அளிக்க வலியுறுத்தல்

    By dn  |   Published on : 13th June 2016 11:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    தமிழகத்தில் நலிந்து வரும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களைக் காப்பாற்ற அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
     தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக சம்மேளனத்தின் மாநிலக் குழுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் அ.செளந்தர்ராஜன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் ஆறுமுக நயினார், துணைத் தலைவர்கள் ஏ.பி.அன்பழகன், எம்.சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
     கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலத் தலைவர் அ.சௌந்தர்ராஜன் அளித்த பேட்டி:
     தமிழகத்தில் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் பல கிராமங்களில் இயக்கப்படுகின்றன. மேலும் 30 லட்சம் மாணவர்கள் இலவச பேருந்து பயண அட்டை மூலம் பயன்பெறுகின்றனர். விலைவாசி உயர்வு, மோட்டார் உதிரி பாகங்களின் விலை, டயர் விலை உயர்வு, பல்வேறு நிர்வாகக் காரணங்களால் போக்குவரத்துக் கழகங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. தொழிலாளர்கள் பணம் ரூ. 5 ஆயிரம் கோடியை செலவு செய்துதான் போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுகின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பிரச்னையைத் தீர்க்க நிதியை அளிக்க வேண்டும்.
     ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன்களை வழங்க வேண்டும், கடும் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai