சுடச்சுட

    

     பொன்னேரி வட்டத்தில் விவசாயத்தை பாதிக்கும் வகையில் இருந்த 26 இறால் பண்ணைகளை வருவாய்த் துறையினர்

    அகற்றினர்.
    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள தேவம்பட்டு, உப்பு நெல்வாயல், பள்ளிப்பாளையம், பாக்கம், அகரம்

    பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இறால் பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவு

    நீரால் நிலத்தடி நீராதாரம், விவசாயத் தொழில் பாதிப்புக்கு உள்ளாகியது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் இறால் பண்ணைகளை அகற்ற

    கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக கோரிக்கை மனுக்கள், சாலை மறியல், ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில்

    ஈடுபட்டு வந்தனர். இருந்தும் இறால் பண்ணைகள் அகற்றப்படாமல் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் சென்னையில் உள்ள தேசிய பசுமை

    தீர்ப்பாயத்தை விவசாயிகள் நாடினர்.
    விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள இறால் பண்ணைகளை அகற்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து

    பொன்னேரி வட்டாட்சியர் சண்முகம், பாக்கம் கிராமத்தில் இருந்த 8 இறால் பண்ணைகளை அண்மையில் அகற்றினார். இந்நிலையில்

    பள்ளிப்பாளையம், உப்பு நெல்வாயல், தேவம்பட்டு, அகரம் கிராமங்களில் இருந்த 18 இறால் பண்ணைகளை வட்டாட்சியர் சண்முகம்

    புதன்கிழமை அகற்றினார்.
    விவசாயிகள் மகிழ்ச்சி...: விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள இறால் பண்ணைகள் அகற்றப்பட்டதை அடுத்து அப்பகுதி

    விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai